வாங்கக் கூடாத மனைகள்

1. சதுர மனை : சரியான பக்கங்களில் உடைய சதுரமனைதான்
ஆனால் திசைகாட்டும் கருவியை பார்க்கும்போது 15° க்கு மேல் வடக்குப் பகுதி திரும்பியுள்ளது இவை சிறந்த பலனை தருவதில்லை.


2. நீர் சதுர மனை : சரியான அமைப்புடைய நீள் சதுர மனைதான்
ஆனால் 15° க்கு மேல் திசை திரும்பி உள்ளதால் சிறப்பானதல்ல. இது போல் அனைத்து மனைகளுக்கும் திசையானது 15° க்கு மேல் திரும்பியிருந்தால் தவிர்க்கப்பட வேண்டிய மனையாக கருத வேண்டும்.


3. நான்கு மூலைகளும் இல்லாத மனை : தவிர்க்கப்பட வேண்டிய
மனை மனையின் நான்கு மூலைகளும் வெட்டப்பட்டுள்ள மனையாகும்.


4. மத்தியப்பகுதி குறைந்த மனை : நான்கு மூலைகளும் வளர்ந்து
மத்தியப்பகுதி குறுகி உள்ள மனை.


5. முக்கோண மனை : மனையில் ஒர் திசையில்லாமல் மற்ற
மூன்று பக்க திசைகளுடன் உள்ள மனை கண்டிப்பாக தவிர்க்கப்பட
வேண்டும்.


6. ஆறு பட்டை வடிவம் கொண்ட மனை : மனையின் அமைப்பு
ஆறு பக்கங்களை கொண்டது. எந்த பக்கமும் 90° இருக்காது
அதைவிட குறைவாகவும் கூடாவும் தான் இருக்கும் தவிர்க்கப்பட
வேண்டியது.

7. எட்டுப்பட்டை வடிவம் கொண்ட மனை : மனையின் அமைப்பு
எட்டு பக்கங்களை கொண்டது தவிர்க்கப்பட வேண்டிய மனையும் அல்ல உபயோகிக்கக் கூடிய மனையும் அல்ல வாஸ்து மாற்றங்கள் செய்தால் பயன்படும் அமைப்புடையது சரியான வாஸ்துவின்படி வீடு அமைத்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.


8. தென்கிழக்கு வளர்ந்த மனை : தவிர்க்கப்பட வேண்டியது மனையின்
தென்கிழக்குப் பகுதியில் கிழக்குப் பகுதி Box வடிவத்திலோ அல்லது
அகன்ற வடிவத்திலோ வளர்ந்திருந்தால் தவிர்க்கப்பட வேண்டியது
அல்லது வாஸ்து மாற்றங்கள் செய்து பயன்ப்படுத்திக் கொள்ளலாம்.


9. மனையின் வடமேற்குப் பகுதிகள் வளர்ந்த மனை : கண்டிப்பாக
தவிர்க்கப்பட வேண்டிய மனை.


10. தென்மேற்குப் புறத்தில் தெற்கு, மேற்கு, தென்மேற்கு வளர்ந்த
மனை : இவை அனைத்தும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய
மனைகள்.


11. வட்ட வடிவ மனைகள் : மனையின் வட்ட வடிவத்தில் இருப்பது.
அரசாங்க சம்பந்தப்பட்டவைகளுக்கு ஒர் சிறிய அளவே உபயோகப்படக்கூடியது தவிர்க்கப்பட வேண்டிய மனையே!


12. அரைவட்டம் : மனையின் அமைப்பு அரைவட்ட வடிவமாக
அமைந்த மனை தவிர்க்கப்பட வேண்டியதே!


13. உடுக்கு மனை : மனையின் அமைப்பு உடுக்குபோன்ற அமைப்பு
உடையது தவிர்க்கப்பட வேண்டிய மனையே!


14. கோடாரி மனை : மனையின் அமைப்பைப் பாருங்கள் கோடாரி
போன்ற அமைப்பை உடையது இதுவும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய மனையே ஆகும் இதே போன்ற அமைப்புடைய மனையில் ஏற்ப்பட்ட ஆபத்து குறித்து பின்பு தெரிந்து கொள்வோம்.


15. கூம்பு வடிவ மனை : மனையின் ஒரு பகுதி இருபுறமும் சரிவாக வளர்ந்த கூம்பு வடிவத்தில் காணப்படும் தவிர்க்கப்பட வேண்டிய மனைதான். ஆனால் கூம்புப்பகுதி அமைப்பு அதிகமாக இல்லை என்றால் கோடிட்ட பகுதிக்கு மேல் விட்டு விட்டு மனையை சதுரமாக மாற்றி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.


16. சகட மனை : T வடிவத்தை தலைகீழாக அமைப்பதைப் போன்ற
அமைப்புடைய மனை சகட மனை எனப்படும் கண்டிப்பாக
தவிர்க்கப்பட வேண்டிய மனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked*

Get A Quote